பயிற்சியில் ஸ்டெம்புகளை உடைத்தெறிந்த- ட்ரெண்ட் போல்ட்..!

இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி வருகின்ற 19 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.

இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்காக அணைத்து அணி கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ட்ரெண்ட் போல்ட் மிகவும் வேகமாக ஓடி வந்து பந்தை வீசுகிறார் அவர் வீசிய பந்தின் வேகத்தால் ஸ்டெம்புகளை உடைந்துள்ளது என்றே கூறலாம், மேலும் இதனை வைத்து பார்க்கையில் ட்ரெண்ட் போல்ட் சிறப்பாக இந்த ஆண்டு செயல்படுவர் என்று கருதப்படுகிறது.