Shawarma: நாமக்கல்லில் ஷவர்மா, கிரில் சிக்கன் உணவுகளுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!

நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கனுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி இன்று உயிரிழந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உமா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர், இன்று காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாமக்கல்லில் ஷவர்மா, கிரில் சிக்கன் உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில், ஷவர்மா சாப்பிட்ட மேலும் 13 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், அந்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.