இந்த காரணத்தால 13 படங்களை நான் விட்டுட்டேன்! பப்லு வேதனை!

தமிழ் சினிமாவில் நான்கு சுவர்கள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் இந்த படத்தை தொடர்ந்து, நான் வாழவைப்பேன், பந்தம், சிகரம், வானமே எல்லை, மணிரத்னம், அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார்.  தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இப்படி இவர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இவர் மிகவும் ட்ரெண்ட் ஆக காரணம் அவரு ஷீத்தல் என்ற இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் வெளியே சென்று புகைப்படங்களை வெளியிட்டது தான். இதன் மூலம் இவருடைய பெயர் மிகவும் ட்ரெண்ட் ஆனது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து  சில மாதங்கள் பப்லு ஷீத்தல் இருவருடைய புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகவில்லை.

ரொம்ப ஏமாந்துட்டேன்…துரோகம் செஞ்சிட்டாரு! ஷீத்தல் பற்றி எமோஷனாக பேசிய பப்லு!

இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்ற குழப்பம் எழுந்தது. இதனால் பப்லு மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துவிட்டார். இப்போது பல மீடியாக்களுக்கு பப்லு பேட்டி கொடுத்து கொண்டு வருகிறார். அந்த வகையில், பேட்டி ஒன்றில் பேசிய பப்லு ” எனக்கு ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

குறிப்பாக அவள் வருவாளா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த பிறகு எனக்கு அடுத்ததாக தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்தது. கிட்டத்தட்ட அந்த படத்திற்கு பிறகு மட்டும் எனக்கு 13 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அதே சமயம் எனக்கு தெலுங்கில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் என்னால் அந்த தமிழ் படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாவே எனக்கு 13 படங்கள் மிஸ் ஆகிவிட்டது” எனவும் பப்லு தெரிவித்துள்ளார்.