ரொம்ப ஏமாந்துட்டேன்…துரோகம் செஞ்சிட்டாரு! ஷீத்தல் பற்றி எமோஷனாக பேசிய பப்லு!

ரொம்ப ஏமாந்துட்டேன்…துரோகம் செஞ்சிட்டாரு! ஷீத்தல் பற்றி எமோஷனாக பேசிய பப்லு!

Babloo Prithviraj

நடிகர் பப்லு பிரித்விராஜ் ஷீத்தல் என்ற 23 வயது பெண்னை காதலித்து இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒரு தகவல் தான். இருவரும் எப்போது வெளியே செல்லும்போது எடுத்துக்கொள்ளும் ரொமாண்டிக் புகைப்படங்கள் மற்றும் நடனம் செய்யும் வீடியோக்கள் என அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வந்தார்.

ஆனால், கடந்த 1 மாதங்களாக இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்விகளும் எழுந்தது. பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் பப்லு- ஷீத்தல் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றே கூறியும் விட்டார்.

இதுவரை இது பற்றி பேசாமல் இருந்த பப்லு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பப்லு “வாழ்கை இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இனிமேல் நான் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. இனிமேல் என்னுடைய ஃபிட்னஸ் பற்றி மட்டும் தான் சொல்லப்போகிறேன்.

பப்லுவை கழட்டிவிட்ட ஷீத்தல்! காரணத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

என்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றி விஷயங்களை யாருக்கும் தெரியாமல் எனக்குள்ளே பாதுகாப்பாக வைத்திருக்க முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் நான் இதுவரை பல ஏமாற்றங்களை சந்தித்துவிட்டேன். இந்த ஏமாற்றங்களுக்கு பிறகும் நான் திருந்தவில்லை என்றால் நான் ஒரு முட்டாள் என்று தான் சொல்வேன்.

சினிமாத்துறையில் அழகு நல்ல உடல் அமைப்பு பட வாய்ப்புகள் என கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்துவிட்டார். ஆனால், என்னுடைய வாழ்க்கையை மட்டும் சரியாக கொடுக்கவில்லை. அந்த விஷயத்தில் மட்டும் துரோகம் செய்துவிட்டார்.  என்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றிய விஷயங்கள் மக்களுக்கு தேவைப்படாத ஒன்று எனவே நான் எதற்காக இதையெல்லாம் சொல்லணும்.

ஷீத்தலை விட்டு பிரிந்துவிட்டேன் என்று நான் எங்கயாவது சொன்னேனா?  அல்லது ஷீத்தல் தான் அப்படி சொன்னாரா? ஷீத்தல் இப்போது பெங்களூரில் இருக்கிறார்.  நாங்களே இதனை பற்றி பேசாமல் நீங்களே ஒரு கேள்வியை கேட்டுவிட்டு நீங்களே தவறாக புரிந்துகொள்கிறீர்கள். எனவே, இனிமேல் இந்த பிரச்சனை பற்றி பேசாதீர்கள்” எனவும் நடிகர் பப்லு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube