ஜனவரியில் 15% அதிகரித்த வாகன சில்லறை விற்பனை..!

ஜனவரியில் 15% அதிகரித்த வாகன சில்லறை விற்பனை..!

இந்தியா முழுவதும் சில்லறை வாகன விற்பனை இந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து வகை வாகனங்களும் வலுவான வளர்ச்சியை எட்டி உள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், ட்ராக்டர்கள் மற்றும் வர்த்தக வாகனகள் போன்ற ஒட்டு மொத்தமாக சந்தை 15% விரிவடைந்துள்ளது.

இதில் இரு சக்கர வாகனங்கள் 15 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 37 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 13 சதவீதமும் , டிராக்டர்கள் 21 சதவீதமும் மற்றும் வர்த்தக வாகனங்கள் 0.1 சதவீதமும் உயர்ந்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை ஆட்டோமொபைல் சங்கத்தின் கூட்டமைப்பானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்திய சந்தையில் விலையுயர்ந்த மின்சார கார் இதுதான்! வியக்கவைக்கும் சிறப்பம்சங்கள்

அந்த அறிக்கையில், கிராம புறத்தின் சந்தையில் இரு சக்கர வாகனங்களின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. மேலும்,  அரசாங்கத்தின் பயிர் உற்பத்தி மதிப்பீடுகள் போன்ற ஆதரவால் இரு சக்கர வாகன பிரிவு நன்கு பயனடைய உள்ளனர் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த ஜனவரியில் பயணிகள் வாகன பிரிவு இதுவரை பார்க்காத உயரத்தை  எட்டி உள்ளது. மொத்தம் 3,93,250 வாகனங்கள் விற்கப்பட்டு நவம்பர் மாத சாதனையை முறியடித்துள்ளது.

இருந்தாலும், அதிக கணக்கிலான வாகனங்கள் இருப்பில் இருந்து வருகிறது. அது இன்னும் 50 -55 நாட்கள் வரை நீடிக்கும்.  ட்ராக்டர்களின் விற்பனையும் முந்தய மாதங்களின் மந்த நிலையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது நேர்மறையான  உயர்வை கண்டுள்ளது. இந்த உயர்வு பயிர் உற்பத்தி, கோதுமை சாகுபடி மற்றும் வானிலையின் மாற்றங்கள் போன்றவற்றால் உயிர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வணக்கத்தின் இந்த நான்காவது காலாண்டில் அதிக அடிப்படை விளைவு மற்றும் வரவிருக்கும் தேர்தல்களின் காரணமாக வணிக வாகனங்களின் விற்பனை சற்று குறையக்கூடும் என்று சங்கம் கூறி இருக்கிறது. மேலும், அரசாங்கத்தின் நம்பிக்கையான பயிர் உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு போன்றவற்றால் கிராமப்புறத்தில் இரு சக்கர வாகனம், மற்றும் ட்ராக்டர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் இருப்பு நிலையை கருத்தில் கொண்டு அந்த, அந்த வாகன சந்தைக்கு தேவையான வாகன உற்பத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) தலைவரான மணீஷ் ராஜ் சிங்கானியா பரிந்துரைத்திருக்கிறார்.

 

Join our channel google news Youtube