எம்மாடியோ!! ஒரு வழியாக ஆயுத பூஜையில் குறைந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

ஆயுத பூஜை நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளதால்,இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும்.  கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை கடும் ஏற்றம் கண்டு வந்த நிலையில், ஆயுத பூஜையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

(22.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,360க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,670க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.78.70க்கும், கிலோ வெள்ளி ரூ.78,700க்கும் விற்பனையாகிறது.

(23.10.2023) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூ.78.50க்கும், கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனை செய்யப்பட்டது