ஜல்லிக்கட்டு காளைக்கு உயிரோடு சேவல் – 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

சமீபத்தில், ஜல்லிக்கட்டு காளைக்கு வலுக்கட்டாயமாக சேவல் ஊட்டுவது போன்ற வீடியோ ஒன்றை யூடியூபர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கிய நிலையில், கால்நடைகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

தற்பொழுது, இது தொடர்பான விசாரணையில் குற்றவாளிகள், சேலம் சின்னப்பம்பட்டி அருகே அக்கறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் காளை என்பது தெரியவந்தது. இதற்கு காரணமான ரகு மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு காளைக்கு உணவாக உயிருடன் சேவல் – போலீசார் வழக்கு பதிவு!

அதாவது, சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரகு என்பவரின் சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது. வைரலான அந்த வீடியோவில், மூன்று பேர் காளையை பிடித்துக்கொண்டும், மற்றொருவர் ஜல்லிக்கட்டு காளைக்கு உயிருடன் இருக்கும் சேவலை ஊட்டுவதையும் காட்டியது.

இது பற்றி ஆர்வலர்கள் கூறுகையில், “ காளை, தாவரவகை விலங்கு என்பதால், கோழியை சாப்பிட கட்டாயப்படுத்துவது கற்பனை செய்ய முடியாதது. இப்படி செய்து இந்த காளை ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றால், பல காளை உரிமையாளர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்” என கவலையுடன் கருத்து தெரிவித்திருந்தனர்.