தமிழ்நாட்டில் 1,000 கோடி முதலீட்டில் ‘ராயல் என்பீல்டு’ எலக்ட்ரிக் பைக் உற்பத்தி தொழிற்சாலை.!!

பைக் என்றாலே பெரும்பாலும் அதன் தோற்றம் மற்றும் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் வாங்குவது உண்டு. அந்த வகையில், பல மக்கள் பலரும் விரும்பக்கூடிய பைக்  என்றால், ராயல் என்ஃபீல்டு தான் என்று கூறலாம்.

இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை சற்று உயர்ந்துள்ள காரணத்தால் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி அனைவருடைய கவனமும் சென்றுள்ளது.  இதனையடுத்து,  ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரிக் வாகன ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 60 அடி நிலப்பரப்பில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் ஆலை அமைகிறது. என என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதற்கான பணிகள் இந்த ஆண்டிற்குள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.