இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவு – சட்டப்பேரவையில் அஞ்சலி!

தமிழகத்தை சேர்ந்த 18 வயதான டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மேகாலயாவில் இன்று நடைபெற உள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது தீனதயாளன் சென்ற கார் மீது எதிரே வந்த லாரி மோதியதில் தீனதயாளன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாட்களுக்கு பின்பதாக தமிழக சட்டப் பேரவை இன்று கூடியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா  தீனதயாளன் மறைவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

author avatar
Rebekal