“பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தாய்” சித்ராவின் மறைவு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகர் குமரன் .!

“பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தாய்” சித்ராவின் மறைவு குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட நடிகர் குமரன் .!

Default Image

பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்த நீ எதுவாயினும் எதிர்த்து போராடியிருக்க வேண்டும் என்று கூறி சித்ராவின் மறைவுக்கு நடிகர் குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .

அதிலும் கதிர் -முல்லையின் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு .மற்ற நடிகைகளை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறப்பட்டது .இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பல ஆயிரக்கணக்கான லைக்குகளும் , கமென்ட்களும் வருவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .தனது சீரியலுக்கான படப்பிடிப்பை முடித்து விட்டு நள்ளிரவு தான் தங்கியிருந்த ஓட்டலில் கணவரான ஹேமந்துடன் வந்ததாகவும்,அங்கு அவர் குளிப்பதாக கூறி விட்டு ஹேமந்த் அவர்களை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சித்ரா காணப்பட்டார் .

சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகை, நடிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் சித்ராவுடன் நடித்த குமரன் அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சித்ராவின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் நீ உன்னுடைய தைரியத்தால் தான் அறியப்பட்டாய் .பல பெண்களுக்கு முன் உதாரணமாக இருந்த நீ எதிர்த்து போராடி இருக்க வேண்டும்.இது அதற்கு பதில் அல்ல என்று கூறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Chithu

Join our channel google news Youtube