500 கோடி பட்ஜெட்..ராவணன் வேடத்தில் யாஷ்…ராமாயணம் பட செம அப்டேட்.!

Ramayana: பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகப் போகும் ’ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் படத்தில் நடித்து வரும் நிலையில் கே.ஜி.எஃப் நாயகன் யாஷும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிக்க, நடிகர் யாஷ் தனது புதிய முயற்சியான ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார்.

அதாவது, முன்னதாக அவர் தனது வரவிருக்கும் பெரிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம், பிரமாண்டமாக உருவாகவுள்ள “ராமாயணம்” படத்தை  யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இந்த படத்தை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.

படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதாவாகவும், யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கிறார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது குறித்து ஏப்ரல் 17 -ஆம் தேதி ராம நவமி அன்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.