சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..!

சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..!

மதுரையில், எரிவாயு விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு  நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பதாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

எரிவாயு விலை உயர்வு 

அந்த வகையில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் ரூ.2253 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலும் சென்னையில் 2406 ரூபாயும், மும்பையில் 2205 ரூபாயுமாக இந்த சிலிண்டர் விற்கப்பட்டு வருகிறது.

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 

தற்பொழுது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.949.50 ஆகவும், சில பகுதிகளில் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையில், எரிவாயு விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்து மத்திய அரசுக்கு  நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube