த்ரிஷா வா? சமந்தா வா? அட்லீ யாரை தேர்வு பண்ணப்போறாருனு தெரியலையே!

Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம்.

இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருவது தான்.

புஷ்பா 2 படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக எந்த ஹீரோயினை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து நேற்றிலிருந்து படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்தையும் அடிபட்டு கொண்டு இருக்கிறது. சமந்தா ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் நடித்திருந்தார். எனவே, அவரை நடிக்க வைக்கலாமா? அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ சற்று குழப்பத்தில் இருக்கிறாராம்.

த்ரிஷாவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஏனென்றால், அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக்லைஃப் படத்திலும் கூட த்ரிஷா நடித்து வருகிறார். அதைபோல் மற்றோரு பக்கம் தரமான கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு சமந்தாவும் இருக்கிறார். இருவரில் யார் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தாலும் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. யார் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.