வேலூர் தேர்தலில் அமமுக ஆதரவு யாருக்கு – டிடிவி தினகரன் பதில்!

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அமமுக கட்சியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் இன்று பேசிய அவர், அமமுக கட்சியாக பதிவு செய்த பின்பே இனி வரும் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடக்கும் வேலூர் தொகுதி தேர்தலில் அமமுக ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

அதிமுக அமைச்சர்கள் பலர் தங்கள் கட்சியை சார்ந்த பலரை இழுத்து ஆள் பிடிக்கும் வேளையில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற குற்றசாட்டை முன் வைக்கிறார். அதே போல், உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவோம் என்ற பொய் வாக்குறுதி அளித்து அமமுக கட்சியை சார்ந்த நிர்வாகிகளை இழுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.