பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லை இவரா .?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லை இவரா .?

Default Image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரியலை பல ரசிகர்கள் சித்ராவிற்காவே பார்த்தனர் .ஆனால் தற்போது அவர் இல்லை .எனவே முல்லை கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது . சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் முல்லை கதாபாத்திரத்தில் ஒரு நடிகையை நடித்து வைத்து தான் ஆக வேண்டும் என்பதால் முல்லை கதாபாத்திரத்திற்கு பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே இவர் நெஞ்சம் மறப்பதில்லை,ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இவர் சித்ராவின் நெருங்கிய தோழியும் ,கடைசி நேரத்தில் சித்ராவுடன் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

saranya

Join our channel google news Youtube