33.3 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான்- ஜெயக்குமார்

அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான் என ஜெயக்குமார் பேட்டி. 

இன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீடு, அவர்களது உறவினர்கள் என பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை .போது ஐ.டி அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து  வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வருமான வரித்துறை தனது கடமையை செய்கிறது. சோதனை செய்யவிடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல். செந்தில்பாலாஜி சட்டத்திற்கு அப்பாற்பட்டவரல்ல.

  அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான். ஐடி ரெய்டிற்கு போலீசார் உரிய பாதுகாப்பு தர தவறியுள்ளனர் கரூர் மாவட்ட எஸ்பி மீதும் தவறு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் திமிங்கலங்கள் அதிகம் உள்ளனர். பணக்கார குடும்பத்தை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.