பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார்- ஆரி!

பாலாஜிக்கிட்ட பேசும்போது கையை கட்டிக்கிட்டு பேசுங்க கமல் சார் என ஆரி இந்த வாரம் நடந்த பிரச்னையை காரணம் காட்டி கூறுகிறார். 

பிக்பாஸ் வீட்டில் சனிக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரலையில் பேசுவது வழக்கம். அது போல இன்று போட்டியாளர்களை சந்தித்து கமல் பேசுகிறார். கடந்த வாரம் முழுவதுமே சண்டையும் வாக்குவாதங்களும் நிறைந்ததாக தான் போட்டியாளர்களுக்கு இருந்தது. அவ்வளவு சண்டையையும் தீர்த்து வைப்பதற்ள்ளே கமல் சாருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

அவர் கடந்த வார கதைகளை துவங்குவதற்கு முன்பாக பாலாஜி துவங்கிவிட்டார், ஆரி  நல்லா கதை எழுதுவார் என பாலாஜி கூற, பாலாஜியிடம் பேசும்போது கையை கட்டி பேசுங்க சார் என்று ஆரி சொல்ல மாறி மாறி இருவரும் அடித்துக் கொள்கிறார்கள். மேலும் சண்டை நடக்கும் பொழுது ஆரி வந்து சாதாரணமாக அட்வைஸ் பண்ணிட்டு போகிறார் என பாலாஜி கூறுகிறார். அதற்கு கமல் அவர் பாணியில் நக்கல் அடிக்க போட்டியாளர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். வீடு இன்று சண்டைகளை தீர்ப்பதற்குள் குதுகலமாகி விட்டது என்றுதான் கூறியாக வேண்டும் இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal