தளபதி -65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்பொழுது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு….!

தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ஆம் தேதி மாலை படத்தின் தலைப்புடன் வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் அவர்களது இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் தளபதி 65 படத்துக்கான அப்டேட் ஏதேனும் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி மாலை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal