அனிமல் விமர்சனம்: என்ன த்ரிஷா நீங்களே இப்படி பண்ணலாமா? விளாசும் நெட்டிசன்கள்.!

அனிமல் விமர்சனம்: என்ன த்ரிஷா நீங்களே இப்படி பண்ணலாமா? விளாசும் நெட்டிசன்கள்.!

trisha mansoor

நடிகை த்ரிஷா மீதான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை நாளுக்கு நாள் பெருகி கொன்டே சொல்கிறது

நடிகை த்ரிஷாவுக்கு இப்போ தான் ஒரு சர்ச்சை முடிந்தது என்றால், பின்னாடியே இன்னொரு சர்ச்சை ஒட்டிக்கிட்டது போல் தெரிகிறது. ஆம், சமீபத்தில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை.

அதற்குள், அனிமல் திரைப்படம் குறித்து த்ரிஷா முன்வைத்த விமர்சனம்  பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி எழுத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் அனிமல். தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவான இந்தப்படம்  (டிசம்பர் 1ம் தேதி) உலக முழுவதும் வெளியானது.

படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.236 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் கதைக்களம் என்பது தந்தை பாசம் கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் மகனுக்கும்.

முதல் நாளில் ரூ.100 கோடி தட்டிய அனிமல்! ஷாருக்கானை மிஞ்சி ரன்பீர் கபூர் மிரட்டல் சாதனை.!

அவன் பாசம் வைக்கும் தந்தைக்கும் இடையிலான கதை தான். குறிப்பாக, படத்தில் பெண் வெறுப்பின் வெளிப்படையான செய்தியை விவரிப்பதாகவும் சொல்லப்டுகிறது.  இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில், “ஒரே வார்த்தை – கல்ட் (CULT) ப்ப்பாஆஆஆஆஆ…” என்று குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, இவருக்கு கடும் எதிர்ப்புக்ள் கிளம்பியது.

Trisha review on Animal
Trisha review on Animal [File image]
காரணம், சமீபத்தில் மன்சூர் அலிகான் சர்ச்சையில் சிக்கியபோது பெண்களுக்கு மரியாதை இல்லை என்று புகார் அளித்துவிட்டு, தற்போது பெண்களுக்கு எதிரான படத்தினை எப்படி பாராட்டுகிறீர்கள் என சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையில், த்ரிஷா கடைசியாக  ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் அஜித்துடன் இணைந்து ‘விடா முயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜானில் உள்ளார்.

Join our channel google news Youtube