நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலமாக தான் நடிக்கும் படங்களுக்காக தன்னுடைய கெட்-அப் களை மாற்றி மாற்றி வருகிறார்.குறிப்பாக அவர் தற்போது நடித்து முடித்துள்ள மாவீரன் படத்திற்காக கூட உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்தார். இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது அவருடைய அடுத்த படைத்திறகாக அதாவது sk21 படத்திற்காக அவர் வைத்துள்ள கெட்டப் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர் ஒருவருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் சற்று உடல் எடை அதிகரித்து நரைத்த தாடியுடன் இருக்கிறார். ரசிகருடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னங்க சொல்றீங்க..? இது நம்ம சிவகார்த்திகேயனா..? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்த கெட்டப் சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக இருக்கும் என தெரிகிறது.

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல அயலான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SK New Look & physique 💥🔥 He’s Looking Stunning 😎#SK21 Gonna Be Differently Different One From Previous Ones 😎 #Sivakarthikeyan #PrinceSK #rajkumarperiyasamy 💥 pic.twitter.com/8JyKTr0aks
— Kanagavel (@Kanagavel02) May 25, 2023
anna look la etho sambavam iruku pola athan reaveal aga kastam waiting 🔥#Sivakarthikeyan #Maaveeran #sk21joiningforces #Ayalaan pic.twitter.com/yQmIsKJPsC
— RATHIN (@RATHIN23421275) May 25, 2023