அவரை பாதுகாக்க முயற்சித்தவர்களை என்ன செய்ய போகிறீர்கள் ? பிரியங்கா காந்தி.! 

குற்றவாளி விகாஷ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ,அவரை பாதுகாக்க முயற்சித்தவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை பிரியங்கா காந்தி  எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க முயன்ற 8 போலீசாரை சுட்டு கொன்றுள்ளது விட்டு தலைமறைவாக இருந்தார்.  அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்,காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகவும், இதனால்,  விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,  குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். அவர் செய்த குற்றமும், அவனைக் காப்பாற்றியவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். ? அதை என்ன செய்யப் போகிறீர்கள்  என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.