தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில்…!

தமிழகத்தில் 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. 

தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதன்படி, அதிகபட்சமாக வேலூரில் 105, திருத்தணி, திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

மேலும், மதுரை விமான நிலையம் 103, ஈரோடு, கரூர், பரமத்தி, தஞ்சை, மதுரையில் தலா 102 டிகிரி, சேலம் 101, பாளையங்கோட்டை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.