Weight loss : உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம்னு யோசிக்கிறீங்களா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ மிக முக்கியமான காரணமாக இருந்தது அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் தான்.

இன்று நமது முன்னோர்கள்  உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றுகின்றோமா என நமக்கு நாமே கேள்வி எழுப்பினால், இல்லை என்ற பதில் தான் வரும். எனவே நாம் நமது உடல் எடையை குறைக்க விரும்பினால், முதலில் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவைக் குறைப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்வது முக்கியம். தற்போது இந்த பதிவில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் எந்தெந்த உணவுகளை உட்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் கலோரிகளில் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தவை. பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் அதிகம் சேர்ப்பது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவும் மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

அதேபோல், சில பால் பொருட்கள், குறிப்பாக குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால், புரதம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் கொண்டது. தானிய வகைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது உடல் எடையைக் குறைக்க, நீங்கள் சாப்பிடும் உணவுகளை மட்டுமல்ல, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளின் அளவையும் கவனிக்க வேண்டும். உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க, நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்கலாம் அல்லது குறைந்த கலோரி உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். உணவு மட்டுமல்லாது, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.