நம் கண்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ் ரெடி!

Lifestyle

நவீன காலத்தில் மின் சாதனப் பயன்பாடு கண்களுக்கு அதிக வேலை கொடுத்து, கண் வறட்சி, பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.

கண்களை எவ்வாறு பராமரிப்பது மற்றும் கண் கோளாறுகளை குறைக்கக் கூடிய உணவு முறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மீன் கடல் சார்ந்த உணவுகளை பயன்படுத்துவது சிறந்தது அதில் ஒமேகா 3 ஆசிட் அதிகம் உள்ளது.

விட்டமின் ஏ அதிகம் நிறைந்த உணவுகளான பப்பாளி ,கேரட் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கண் வரட்சியாகாமல் இருக்க உதவும்.

பச்சை நிற காய்கறிகளில் மல்டி நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது. குறிப்பாக,  பசலைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவை கண்களுக்கு நல்லது.

முட்டையின் வெள்ளை கருவை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் இது கண் பார்வை திறனை அதிகரிக்கும்.

மேலும் சிறு தானியங்களில், குறைந்த கிளைசெமிக்,   நியாஸின், சிங்க் நிறைந்துள்ளதால் இது கண் கருவிழி ரெட்டினாவுக்கு மிக ஆரோக்கியமானது.

கொட்டை வகைகளில் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் உள்ளது. இது கண் ரெட்டினா (ம) கார்ணியாவில் உள்ள செல்களுக்கு ஊட்டம் கொடுக்கிறது.

அவரை, தட்டை பயறு அதிகம் நம் உணவில் பயன்படுத்த வேண்டும். உணவில் நம் நாட்டு பயிர்களை பயன்படுத்துவது சத்து  மாத்திரை எடுத்துக் கொள்வதற்கு சமமாகும்.

வெள்ளரிக்காய்களை அல்லது உருளைக்கிழங்கை  துண்டாக நறுக்கி கண்களின் மேல் வைத்தால் கருவளையம், கண் வறட்சி நீங்கி கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து கண்ணைச் சுற்றி இரவு நேரங்களில் போட்டு வரலாம்.

விளக்கெண்ணையை கண்மை போடும் இடத்தில் இரவில் தினமும் போட்டு வரவும். இதனால் கண் வறட்சி கருவளையம் வருவதை தடுக்கும்.

அடிக்கடி ஐஸ் டூ பை கண்ணிற்கு ஒத்தடம் கொடுக்கலாம். ஆகவே இந்த முறைகளை பயன்படுத்தி கண்களை நாம் கருத்தாக பராமரித்து வர வேண்டும்.

LIFESTYLE

ஆஹா! அன்னாசி பழத்தில் அண்ணாந்து பார்க்கக் கூடிய இவ்வளவு நன்மைகளா..!