இல்லத்தரசிகளே! இதோ உங்கள் வேலையை எளிதாக்க சூப்பரான டிப்ஸ் ரெடி..!

Lifestyle

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின்பு மாவு பிசைந்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். 

முட்டை வாங்கி வந்த பிறகு அதை தண்ணீரில் போட்டால் முட்டை மேலே மிதக்க கூடாது அவ்வாறு இருந்தால் நீண்ட நாள் பட்ட முட்டையாகும்.

இட்லி நன்றாக உப்பி வர தண்ணீர் கொதித்த பிறகு மாவு ஊற்றி வைக்க வேண்டும்.

மாவு தோசை கல்லில் ஒட்டாமல் வர சிறிதளவு தண்ணீரில் உப்பு சேர்த்து சூடான தோசை கல்லில் தெளித்துவிட்டு அதை துணியால் துடைத்து ஊற்றினால் தோசை ஒட்டாமல் வரும்.

பூண்டு தோலை ஒரு துணியில் கட்டி சூடான கல்லில் வைத்து எடுத்து தலைவலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குணமாகும்.

மிக்ஸி ஜார் லூசா  ஆகிவிட்டால் மூடியின்    நடுப்பகுதியில் ரப்பர் பேண்ட் போட்டு டைட்  செய்து விட்டு அரைத்தால் அரைக்கும் போது எதுவும் கசியாது.

மிக்ஸி பிளேடு கூர்மையாக  கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு கூர்மையாகிவிடும் இதை மாதம் ஒரு முறை செய்து வரலாம்.

வர மிளகாய் நமத்து போகாமல் இருக்க மற்றும் பூஞ்சை தொற்று வராமல் இருக்க அதை ஒரு பாத்திரத்தில் கல் உப்பு சேர்த்து லேசாக வறுத்து சேமித்து வைக்கலாம்.

சுடு தண்ணீரை கொதிக்க வைத்து ஹாட் பாக்ஸில் ஊற்றி, அரை மணி நேரம் மூடி வைத்தப் பிறகு உணவுகளை வைத்தால், உணவுகளின் சூடு நீண்ட நேரம் குறையாமல் இருக்கும்.

பாலை பாத்திரத்தில் ஊற்றும் முன் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிறகு பாலை ஊற்றினால் பாத்திரத்தில் சிறு சிறு புள்ளிகள் வராமல் இருக்கும்.

பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை கலக்குவதற்கு முன் சர்க்கரை சேர்த்த பிறகு இவற்றை கலக்கினால் டம்ளரில் ஒட்டாமல் இருக்கும்.

உடனடியாக புளிக்கரைசல் வேண்டும் என்றால் சுடு தண்ணீரில் கரைத்தால் புளி கரைசல் சுலபமாக கிடைத்துவிடும்.

நம் கண்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ் ரெடி!