அடி தூள்... சூப்பர் ஸ்டாருக்கு டபுள் ட்ரீட் கொடுத்த படக்குழு!

Cinema

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், யோகி பாபு உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். 

ஜெயிலர் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

சுமார், ரூ.240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக முழுவதும் ரூ.600 கோடி வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு Record Maker என குறிப்பிட்டு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேரில் சென்று காசோலை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கலாநிதி மாறன் ரஜினிகாந்த்-க்கு காசோலை வழங்கியதுடன், நடிகர் ரஜினிகாந்த்-க்கு ரூ.1.24 கோடி மதிப்புள்ள  BMW X7 காரையும் பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும், கலாநிதி மாறன் வழங்கிய காசோலையில் படத்தின் லாபத்தில் இருந்து 100 கோடி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Thanks For Watching