அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

Lifestyle

காலம் காலமாக நம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய முக்கியமான உணவு பொருள் தயிர்.

இந்த தயிரை மோர் குழம்பு, தயிர் வெங்காயம், தயிர் சாதம் எபலவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக இருந்தாலும் அதிக மருத்துவ குணம் நிறைந்தது.

தயிர் மிக எளிமையாக செரிமானம் ஆகக் கூடியது. தயிர் ஒரு மணி நேரத்தில் 91% ஜீரணம் ஆகிவிடும்.

தயிரில் விட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டுள்ளது.

தயிரில் உள்ள லாக்டோ பேசிலெஸ் என்ற நல்ல பாக்டீரியா கெட்ட பாக்டீரியாக்களை அழித்து ஜீரணத்தை தூண்ட செய்கிறது.

தயிரிலுள்ள ப்ரோபையோட்டிக் குடலுக்கு நன்மை பயக்கும். தயிரை  நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் 70% உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கலாம்.

குழந்தை பருவத்திலிருந்து தயிரை உணவில் சேர்த்து வந்தால் எதிர்காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அண்டாது இதில் உள்ள கால்சியம் பல் (ம) எலும்புகளுக்கு பலத்தை தரும்.

ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தயிரைத் தொடர்ந்து எடுத்து வந்தால் அதிலிருந்து விடுபட முடியும்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிகளை போக்கக்கூடியது. அல்சருக்கு மிகச்சிறந்த உணவு தயிராகும்.

இதில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால் தசை மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு சிறந்தது. தயிரை நேரடியாக தலைமுடிக்கு தடவி வந்தால் பொடுகு நீங்கி முடி வரட்சியாகாமல் தடுக்கும்.

மன அழுத்தத்தை  உண்டாக்கக்கூடிய கார்டிசோல்  என்ற ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தும். இதனால் ஏற்படும் பதட்டம், படபடப்பு போன்றவற்றை தடுக்கலாம்.

ஆஹா! அன்னாசி பழத்தில் அண்ணாந்து பார்க்கக் கூடிய இவ்வளவு நன்மைகளா..!