மன அழுத்தம் எப்படி வருகிறது..? இதற்கு என்ன தீர்வு..!

Lifestyle

நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் நாம் பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறோம். அதில் பலர் சந்திக்கின்ற பிரச்சனை மனஅழுத்தம்.

மன அழுத்தம் ஒரு மனிதனின் உடல் மற்றும் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு உடலளவில் தலைவலி, வயிற்று வலி, தசை வலி, தூக்கமின்மை, எரிச்சல், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

அதேபோல், மனதளவில், கவலை, பதட்டம், மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள், எதிர்மறையான சிந்தனைகள் போன்ற பிரச்சனை ஏற்படும்.

இளம் வயதினரை பொறுத்த வரையில், அவர்கள் தேர்வு, போட்டி, வேலை தேடுதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடும் போது மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 

இதனால், அவர்களுக்கு பயம், பதட்டம் போன்ற சூழல் ஏற்படும். அப்படிப்பட்ட சமயங்களில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

அதேசமயம் நாள்பட்ட வியாதிகளுடன் கஷ்டப்படுகிறவர்களுக்கு, தங்களது நோயை குறித்த மன அழுத்தம் காணப்படும்.

மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்யலாம்..? வாங்க  இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 

தியானம், மன தியானம் அல்லது இசை கேட்டல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஒரு மனநல நிபுணரிடம் மனம் திறந்து பேச வேண்டும். 

மன அழுத்தம் ஒரு தீவிரமான நிலைக்கு தள்ளப்படும் போது, கண்டிப்பாக மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

Thanks For Watching