Home Blog

பிரியங்கா சோப்ரா நீரவ் மோடியின் தொடர்பை துண்டிக்கிறார்?

நடிகை பிரியங்கா சோப்ரா  நகை வடிவமைப்பாளர் நீரவ் மோடியின் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமக்கு வரவேண்டிய தொகைக்காக அந்த நிறுவனத்தின் மீது பிரியங்கா சோப்ரா சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்படும் நீரவ் மோடியை குறித்த செய்திகள் வெளியானதையடுத்து, தமது ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரியங்கா சோப்ரா திட்டமிட்டுள்ளார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, லிசா ஹைடன் உள்ளிட்ட பலர் நீரவ்...

கேப்டன் விராட் கோலி திட்டம்!இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கவா ?வேண்டாமா ?

கேப்டன் விராட் கோலி இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய அணி, இன்று 6வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை நான்கரை மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க கேப்டன் விராட் கோலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, இந்த...

ரஷ்யாவே சைபர் தாக்குதல் பாதிப்புகளுக்கு காரணம்!

பிரிட்டன் சைபர் தாக்குதலால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரஷ்யாவே காரணம் என  குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உக்ரைனில் உள்ள நிதி, மின்சாரம், மற்றும் அரசுத் துறைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலால் ஐரோப்பிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. இதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு சுமார் 120 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என பிரிட்டன் சாடியுள்ள நிலையில், அதை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.  

அமெரிக்க ராணுவ கமாண்டன்ட் திடீர் எச்சரிக்கை!சீன ராணுவத்தின் வளர்ச்சியை குறைத்து மதிப்பிடக் கூடாது….

அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்திய கமாண்டன்ட் அட்மிரல் ஹாரி ஹாரிஸ் ராணுவ கட்டமைப்புகளை வலுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடக் கூடாது என  எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் ராணுவ தளவாடங்களை சீனா குவித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். அடுத்த தலைமுறை ராணுவ தொழில்நுட்பங்களான அதிவேக ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை அடைவதில் சீனா பெரும் முதலீடு செய்திருப்பதாக குறிப்பிட்ட ஹாரி, இதற்கு இணையான நடவடிக்கைகளை அமெரிக்காவும் மேற்கொள்ளத் தவறினால்...

பேடிஎம் நிறுவனம் வாட்ஸ் ஆப்க்கு எதிராக போர்கொடி!

வாட்ஸ் ஆப்  டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான சேவைக்கு எதிராக பேடிஎம் நிறுவனம் போர்கொடி உயர்த்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான முக்கிய செயலியாக பேடிஎம். உள்ளது. தற்போது இந்த சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் கையில் எடுத்து அதற்கான சோதனை முயற்சியை இந்தியாவில் தொடங்கியது. ஆனால் இதில் லாக் இன் மற்றும் ஆதாரை அடிப்படையாகக் கொண்ட செயல் முறைகள் இல்லை என பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார். இதனால் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்று கவலை தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து...

ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்திற்கு மாநிலச் செயலாளர் நியமிப்பு!

ராஜு மகாலிங்கம்  ரஜினிகாந்தின் மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்த் அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் ரஜினி தனது இயக்கத்தை பலப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை அவரது நண்பரான தமிழருவி மணியன் சந்தித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், இந்த மாத இறுதிக்குள் தமிழகம்...

உளவு அமைப்புகள் எச்சரிக்கை!இனி இந்த றுவனங்களின் ஸ்மார்ட்போன்களை  பயன்படுத்த வேண்டாம்……

அமெரிக்க மக்கள் ஹுவேய் (Huawei) மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை  பயன்படுத்த வேண்டாம் என அந்நாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்நிலையில் உளவுத்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில் எஃப்.பி.ஐ. சி.ஐ.ஏ., என்.எஸ்.ஏ. உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது சீன தொலைத் தொடர்புக் கருவிகள் உற்பத்தி நிறுவனங்களான ஹுவேய் மற்றும் இசட்.டி.இ. நிறுவனங்களின் போன்களை மக்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசு...

விரைவில் மின்சாரத்தால் இயங்கும் கார் ரகங்களான டியாகோ ஈவி மற்றும் டிகோர் ஈவி !

கார் ரகங்களான டியாகோ ஈவி (Tiago EV) மற்றும் டிகோர் ஈவி (Tigor EV) உள்ளிட்ட  மின்சாரத்தால் இயங்கும் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம்   விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2018-ல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 எலக்ட்ரிக் கார்களும் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த பேட்டியளித்த அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும், மேலாண் இயக்குநருமான குவென்டர் பட்ஸ்செக், ஒரு சில மாதங்களில் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் சந்தைக்கு வரும் என தெரிவித்தார். 80 சதவீத சார்ஜ் ஆக 6 மணி நேரம் ஆகும்...

ஷிகர் தவனை நோக்கி கையசைத்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு அபராதம் !

தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு  ,இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் ஷிகர் தவனை நோக்கி கையசைத்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 வது ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்ற போது ரபடா வீசிய பந்தில் ஷிகர் தவன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து தவானை நோக்கி கையசைத்து விடை கொடுத்த ரபடா பெவிலியன் நோக்கி செல்லுமாறு சைகை காட்டினார். ரபடாவின் நடத்தை குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 விழுக்காடு அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு...

அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு!

அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக நிர்வாகிகள் கை காட்டுவோருக்கே அரசுப் பணி என்று தான் கூறவில்லை என  தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நலம்வாழ்வு என்ற பெயரில் நடைபெறும் சித்த மருத்துவ கண்காட்சி துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வேலை வாய்ப்பு முகாம்களில் தனியார் நிறுவனங்கள் அதிகம் பங்கேற்கும் என்பதால், அதில் அ.தி.மு.கவில் உள்ள படித்தவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று சொன்னேனே தவிர, அரசுப் பணி...

Stay connected

0FansLike
879FollowersFollow
4,946SubscribersSubscribe

Latest article

பிரியங்கா சோப்ரா நீரவ் மோடியின் தொடர்பை துண்டிக்கிறார்?

நடிகை பிரியங்கா சோப்ரா  நகை வடிவமைப்பாளர் நீரவ் மோடியின் நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமக்கு வரவேண்டிய தொகைக்காக அந்த நிறுவனத்தின் மீது...

கேப்டன் விராட் கோலி திட்டம்!இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கவா ?வேண்டாமா ?

கேப்டன் விராட் கோலி இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4க்கு...

ரஷ்யாவே சைபர் தாக்குதல் பாதிப்புகளுக்கு காரணம்!

பிரிட்டன் சைபர் தாக்குதலால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரஷ்யாவே காரணம் என  குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உக்ரைனில் உள்ள நிதி, மின்சாரம், மற்றும் அரசுத் துறைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சைபர்...