வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனையடுத்து, இன்று ஏதேனும் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றிய தகவலையும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனவே, இன்றயை வானிலை தொடர்பான செய்தி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..
அதன்படி இன்று 13-03-2025 முதல் வருகின்ற 15-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை : இன்று 13-03-2025 முதல் 16-03-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை 33-34″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.