அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. எச்சரிக்கும் வானிலை மையம்!
சத்தீஷ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால் தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்துள்ளது
சென்னை : தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் நேற்றைய தினம் 100°F க்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தென் தமிழகம் மற்றும் வடக்கு தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில், தமிழகத்தில் இயல்பை விட 3-4’C அதிக வெப்பநிலை காணப்படும் என கணித்துள்ளது.
குறிப்பாக, சத்தீஷ்கரில் நிலவும் காற்றழுத்த பகுதியால் தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை , காரைக்குடி , திருச்சி , பெரம்பலூர், கரூர் , ஈரோடு , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.