ஆசிய நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு!

Default Image

ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய நாடுகளிலும் பருவநிலை மாற்றத்தால்  வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

Related image

பனிப்பொழிவு மற்றும் மூடுபனி காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிபடர்ந்து காணப்படுவதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சாலைகள் மற்றும் தெருக்களில் கொட்டிக் கிடக்கும் பனியை ஒருவர் மீது மற்றொருவர் எரிந்து விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர்.

Related image

ரஷ்யாவில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவில் சாலையில் தேங்கியிருந்த பனியில் சிக்கிய பேருந்தை பொதுமக்கள் மீட்டனர்.

Image result for china in ice rain

சீனாவிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குவான் கவ்சொய் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பனியின் தாக்கத்தால் மரங்கள், செடி, கொடிகள் அனைத்தும் வெள்ளைக் கம்பளம் விரித்தாற்போல காட்சியளிக்கின்றன.

Related image

அப்பகுதியில் உள்ள ஏரி நீர் பாதியளவு உறைந்த நிலையில் காணப்படுவதைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்