ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த மழைக்குப் பிறகு 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையைப் பதிவு செய்துள்ளது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு எமிரேட்ஸின் பெரும் பகுதிகள் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
வானிலை அலுவலக தரவுகளின்படி, அதிகபட்சமாக புஜைரா துறைமுக நிலையத்தில் 255.2 மிமீ நீர் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகபட்சமாக மசாஃபியில் 209.7 மிமீ பதிவாகியுள்ளது மற்றும் மூன்றாவது அதிகபட்சமாக புஜைரா விமான நிலையத்தில் 187.9 மிமீ மழை பதிவாகியுள்ளது.
உயரமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் கார்கள் சிக்கி, தண்ணீரில் சிக்கிக் கொண்ட 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் உணவு, தண்ணீர் மற்றும் தேவையான மருத்துவப் பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு லாஜிஸ்டிக் ஆதரவும் வழங்கப்படுகிறது என ராஸ் அல் கைமா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜா மற்றும் புஜைராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் நாளில் வானிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.