காலை 10 மணி வரை..இந்த 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
சென்னை உட்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேலும், இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை அதிகாலை இது நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் இன்று ரெட் அலெர்ட் விடுத்திருந்தாலும், அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 16, 2024