இந்த 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை!
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. மேலும், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 2 நாட்களில் தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 15ம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று நள்ளிரவு முதலே கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேர்த்திற்கு (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்கிற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 12, 2024
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது.
விடுமுறை இல்லை
விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ.12) வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்த்துள்னர்.