புயல் எங்கே கரையை கடக்கும்? ‘சென்னையை குறிவைக்கும் மழை’ தனியார் வானிலை ஆய்வாளர் அப்டேட்…

புயல் எப்போது கரையை கடக்கும்? எங்கு கரையை கடக்கும்? என தனியார் வானிலை ஆய்வாளர் ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

TN Rains

சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி – சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாள ர்பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாறிமாறி நகர்ந்து வந்ததால், அது எப்போது கரையை கடக்கும்? எங்கு கரையை கடக்கும்? எனஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இப்பொழுது, அதற்கு விடை கிடைத்திருக்கிறது.

அதாவது, வரும் 30ஆம் தேதி பரங்கிப்பேட்டைக்கும் சென்னைக்கும் இடையே ஃபெங்கல் புயல் கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “புயல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும். நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும். சென்னைக்கு தெற்கே கடந்து வருவதால், சென்னையில் டிசம்பர் 2ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு” உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “27ம் தேதி – சென்னை இன்று லேசானது முதல் மிதமான மழை, 28ம் தேதி – சென்னை நாளை மிதமான மழை, 29ம் தேதி – சென்னை கனமழை, 30ம் தேதி – சென்னை மிக கனமழை முதல் தீவிர கனமழை, 1ம் தேதி – சென்னை மிதமான மழை, 2ம் தேதி – சென்னையில் மிதமான மழை பெய்யும்” என்கிற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Red Alert rain
Weather Update in Tamilnadu
Vaibhav Suryavanshi father
fishermen -Cyclone - Weather
TN Rain Update