“வெயிலும் இருக்கு பனியும் இருக்கு” – சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை : தமிழ்நாட்டில் இன்றும் (பிப்.15) நாளையும் (பிப்.16) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° – 3° C அதிகமாக இருக்கக்கூடும் என்றும், காலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வருகின்ற 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
இன்று (15ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (16-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!
March 26, 2025
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
March 26, 2025
விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
March 26, 2025