No Leave : விடிய விடிய கனமழை.. சென்னை, செங், காஞ்சி, திரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.!
சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதில், சென்னையில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று (நவ.12) வழக்கம் போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் இரவு 11 மணி தொடங்கி விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. அடையாறு, அமைந்தகரை, திருவொற்றியூர், கிண்டியில், ஈ.சி.ஆர்., சோழிங்கநல்லூர், மாமல்லபுரத்திலும் கனமழை பெய்தது. கனமழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
குறிப்பபாக, மீனம்பாக்கத்தில் 39.6 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 24.2 மி.மீ. மழை பதிவு பதிவாகியுள்ளது. மேலும், தரமணியில் 39.5 மி.மீ., நந்தனத்தில் 45.5 மி.மீ. மழை பதிவு பதிவாகியுள்ளது.