சென்னை : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், (மே 14) தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நீலகிரி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல்,தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 14 முதல் மே 18-ஆம் தேதி வரை இந்த கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மே 14, 15 ஆகிய அடுத்த 2 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…