புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!
வங்கக் கடலில் உருவான புயல் வலுவிழந்ததை அடுத்து, புயல் எச்சரிக்கை தளர்வு அளிக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மேலும், கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் துறைமுகத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து, பலத்த மழை மற்றும் காற்று இல்லை என்பதால், 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.