உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை மறுநாள் (22 ஆம் தேதி) தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அப்படி உருவாகினால், அது வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ம் தேதி காலை வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை:
இந்நிலையில், மீனவர்கள் மே 23ஆம் தேதி முதல் மத்திய வங்கக் கடலிலும், மே 24ஆம் தேதி முதல் வடக்கு வங்கக் கடலிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலுக்குச் சென்ற மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரைக்குத் திரும்பமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக கனமழை
மேலும், மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கனமழை முதல் மிக கனமழையுடன் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fishermen Warning:
Fishermen are advised not to venture into central Bay of Bengal from 23rd May and into North Bay of Bengal from 24th May onwards. Fishermen out at sea are advised to return to the coast before 23rd May.
— India Meteorological Department (@Indiametdept) May 20, 2024