இந்த மூன்று மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!
சென்னை: தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
இனிய (மே 20ஆம் தேதி) இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும் எனபதால், இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மே 20ஆம் தேதி கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று 20ம் தேதிவரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.