ரெட் அலர்ட்: தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம்… டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை.!
டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை (26.11.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய பகுதிகளிள் இடையே மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்பொழுது தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் மையம் கொண்டது.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 880 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. சென்னையின் தெற்கு தென்கிழக்கே 1,050 கி.மீ. துரத்திலும், புதுச்சேரியில் இருந்து 980 கி.மீ., துரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ரெட் அலர்ட்
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் (நவ. 26, 27) ஆகிய 2 நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாளை (நவ. 26)
அதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், காரைக்கால் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர் விடுக்கப்பட்டுள்ளது
நாளை மறுநாள் (நவ. 27)
இதனை தொடர்ந்து, நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர் விடுக்கப்பட்டுள்ளது.