வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி… இனிமேல் மழை ஆட்டம் ஆரம்பம்.!
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, இன்றைய தினம் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நாளை (டிச.11 )5 மாவட்டங்களில் அதி கனமழையும், நாளை மறுநாள் (டிச.12 ) 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
RR vs KKR: அடுத்தடுத்த சரிந்த விக்கெட்டுகள்… பந்து வீச்சில் மிரட்டிய கொல்கத்தா.! ரன் அடிக்க திணறிய ராஜஸ்தான்.!
March 26, 2025
RR vs KKR : வெற்றிக்கான மோதல்! கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு… பிளேயிங் லெவனில் மாற்றம்.!
March 26, 2025
விடைபெற்றார் மனோஜ்… தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள்..!
March 26, 2025