புயல் உருவாக மேலும் தாமதம்… நகராமல் நங்கூரமிட்ட புயல் சின்னம் நகரத் தொடங்கியது.!
தென்மேற்கு வங்கக்கடலில் நகராமல் நின்றிருந்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நேற்று மாலைக்குள் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் மணிக்கு 10கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 3 கி.மீஆகக் குறைந்தது.
பின்னர், அதுவும் குறைந்து 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீட்டித்து நகராமல் ஒரே இடத்தில் நங்கூரமிட்டது போல் நின்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம். இந்நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 2 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்பொழுது, நாகைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 480 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இப்பொது, 2 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.
அதாவது, இன்று மாலை – நாளை அதிகாலைக்குள் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நவ.30-ம் தேதி காலை காரைக்கால், மகாபலிபுரம் இடையே இது கரையை கடக்கும் என கூறப்படுகிறது.