Categories: வானிலை

தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

Published by
பால முருகன்

Weather Update : தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

கோடை காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

இன்று முதல் 15 -ஆம் தேதி வரை தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.

வெப்பநிலை 

13-ஆம் தேதி முதல் 17 -ஆம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° 3° செல்சியஸ் உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 15-ஆம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 -4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

28 minutes ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

52 minutes ago

CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?

குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…

1 hour ago

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

8 hours ago

#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…

10 hours ago

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

13 hours ago