தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை… வானிலை மையம்.!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தகவல்.
தமிழ்நாட்டில் நேற்று இரவுமுதல் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தாம்பரம், வேளச்சேரி, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விடாமல் பெய்துவரும் மழையால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடைவெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.