தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை -சென்னை வானிலை ஆய்வு மையம்…!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தை பொருத்தவரை அதிக அளவாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.