குடை எடுத்துக்கோங்க… காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.