குடை எடுத்துக்கோங்க.. இந்த 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்!
தமிழ்நாட்டில் 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, தென் தமிழகத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (10 மணிக்குள்) 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 21, 2024
இதற்கிடையில், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேகவெடிப்பால் வரலாறு காணாத அளவில் 3 மணி நேரத்தில் மட்டும் 36 செ.மீ மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது pic.twitter.com/7M3bpM5OOG
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 20, 2024